செஞ்சி சிறுமி வழக்கில் சிக்கிய 600 போன் எண்கள்..! சிபிசிஐடியின் நள்ளிரவு டிஜிட்டல் பிளான்... உரையாடல்கள் கண்காணிப்பு...!!!



hemalatha-missing-girl-cbcid-investigation-M7ELEP

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தில் மாயமான 7 வயது சிறுமி ஹேமலதாவைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. அக்டோபர் 11-ம் தேதி நள்ளிரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி காணாமல் போனார். உள்ளூர் போலீசாரின் தேடுதல் பணியில் துப்பு கிடைக்காததால், வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. தற்போது டிஜிட்டல் ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகின்றது.

600-க்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் ஆய்வு

சிறுமி மாயமான நேரத்தில் ஆலம்பூண்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்ட செல்போன் கோபுரங்களின் தரவுகளை போலீசார் சேகரித்துள்ளனர் . இதன் அடிப்படையில், அந்தப் பகுதியில் இயங்கிய 600-க்கும் மேற்பட்ட செல்போன் எண்களின் அழைப்பு விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: மாந்திரீகமா..? செஞ்சி சிறுமி வழக்கில் அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி...! விஷம் குடிக்க போன ஊராட்சி மன்ற தலைவர்... மாயமான 2 பேர்.! திடுக்கிடும் பின்னணி...!!!

குறிப்பாக, நள்ளிரவு நேரத்தில் வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம் பேசப்பட்ட அழைப்புகள், திடீரென அணைக்கப்பட்ட செல்போன்கள், வெளிமாநில எண்களுடனான தொடர்புகள் ஆகியவை தனித்தனியாகப் பரிசோதிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

சந்தேக நபர்களின் தொடர்புகள் கண்காணிப்பு 

விசாரணை வளையத்தில் உள்ள உள்ளூர் நபர்கள், உறவினர்கள் உள்ளிட்டோரின் செல்போன் தொடர்புகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலரது உரையாடல்கள் கண்காணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

டிஜிட்டல் தடயங்கள் மூலம் துப்பு கிடைக்குமா?

கிராமத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் இதுவரை முக்கியமான தடயம் கிடைக்கவில்லை என்று கூறப்படும் நிலையில், செல்போன் தரவுகள் விசாரணையில் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறுமி மாயமானதற்கான காரணம் என்ன, அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ஹேமலதாவை பாதுகாப்பாக மீட்க வேண்டும் என்பதே குடும்பத்தினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

இதையும் படிங்க: 18 நாட்கள் கடந்து.. 200 மீட்டர் தொலைவில் சிக்கிய முக்கிய ஆதாரம்! 5 பேரை மடக்கி பிடித்த சிபிசிஐடி... செஞ்சி சிறுமி வழக்கில் திடுக்கிடும் திருப்பம்..!!!