அரசியல் பிரவேசத்திற்கு தயாராகும் தனுஷ் நற்பணி இயக்கம் ? 3,000 சட்ட ஆலோசர்கள் நியமிப்பு... தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!!!



dhanush-fans-club-3000-legal-advisors-plan

நடிகர் தனுஷ் தனது நற்பணி இயக்கத்தை தமிழகம் முழுவதும் வலுப்படுத்தும் வகையில், சுமார் 3,000 சட்ட ஆலோசகர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்க நிர்வாகிகளுக்கு ஏற்படும் சட்ட ரீதியான சிக்கல்களுக்கு உதவ இந்தக் குழு அமைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தனுஷின் அரசியல் நகர்வு குறித்த எதிர்பார்ப்பும் மீண்டும் அதிகரித்துள்ளது.

நற்பணி இயக்க நிர்வாகிகளுக்கு சட்ட உதவி

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தனுஷ் நற்பணி இயக்கம் செயல்பட்டு வருகிறது. அங்கு இயக்கத்தின் அன்றாடப் பணிகளை மேற்கொள்ளும்போது நிர்வாகிகளுக்கு சில சட்ட ரீதியான சிக்கல்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு உடனடியாக ஆலோசனை வழங்கும் நோக்கில், வழக்கறிஞர்கள் அடங்கிய குழுவை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: பாஜக-வில் இணையும் தனுஷ்...? வெள்ளி விளக்கில் இருந்த அந்த ஒரு குறியீடு! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!!

சுமார் 3,000 சட்ட ஆலோசகர்கள் இந்தக் குழுவில் இடம்பெறலாம் என்றும், நற்பணி இயக்கத்தின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும் நிர்வாகிகளுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கவும் அவர்கள் பயன்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

அரசியல் பிரவேசத்துக்கான முன்னேற்பாடா?

சமீபகாலமாக நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப்போவதாகப் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தச் சூழலில், சட்ட ஆலோசகர்கள் நியமனம் தொடர்பான தகவலும் கவனம் பெற்றுள்ளது. இது அரசியல் பிரவேசத்துக்கான முன்னேற்பாடாக இருக்குமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகுமா?

எனினும், 3,000 சட்ட ஆலோசகர்களை நியமிப்பது தொடர்பாக நடிகர் தனுஷ் தரப்பில் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்தத் திட்டம் குறித்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அடுத்தகட்ட அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

 

இதையும் படிங்க: ஓய்வில் இருக்கும் OPS..! திடீரென வீட்டிற்கே சென்று சந்தித்த உதயநிதி ஸ்டாலின்...!!!