பார்க்கும்போது பட படன்னு மனசு துடிக்குது...! லாரி டயரில் இருந்து வந்த புகை மூட்டம்...! அடுத்த நொடி டயர் வெடிச்சு தூக்கி வீசப்பட்ட டிரைவர்...! பஞ்சர் கடையில் நடந்த பகீர் காட்சி!!!!



madhya-pradesh-lorry-tyre-blast-driver-killed

மத்திய பிரதேசத்தில் லாரி டயர் வெடித்ததில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் பஞ்சர் கடையில் டயரை கழற்றும் பணி நடந்தபோது இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது. வெடிப்பில் ஓட்டுநரின் கால் துண்டிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரியின் டயர் பஞ்சரானதால், ஓட்டுநர் அனில் குமார் சாஹு அருகிலிருந்த பஞ்சர் கடையில் வாகனத்தை நிறுத்தியுள்ளார். டயரை சரிசெய்யும் பணியில் ஓட்டுநரும் மெக்கானிக்கும் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படிங்க: எப்படியெல்லாம் எமன் வருது பாருங்க! அம்மா என்ன காப்பாத்து... நொடியில் செங்கல் டிராக்டர் லாரி கவிழ்ந்து... 5 வயது சிறுமி துடிதுடித்து பலி! நெஞ்சை உலுக்கும் காட்சி..!!!

புகை வெளியேறிய நிலையிலும் தொடர்ந்த பணி

பஞ்சரான டயருக்கு அருகில் இருந்த மற்றொரு டயர் அதிகளவில் சூடாகியிருந்ததாக கூறப்படுகிறது. அதிலிருந்து புகை வெளியேறத் தொடங்கியபோதும், டயரை கழற்றும் பணி தொடர்ந்து நடந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த லாரி டயர் வெடிப்பு ஏற்பட்டது.

பயங்கர சத்தத்துடன் டயர் வெடித்ததில், அருகில் நின்றிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். வெடிப்பின் தாக்கத்தில் அனில் குமாரின் ஒரு கால் துண்டிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இருவர் படுகாயம்; CCTV காட்சிகள் ஆய்வு

டயர் வெடித்தபோது அங்கு இருந்த மேலும் இருவர் படுகாயமடைந்தனர். அவர்கள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெடிப்பு தொடர்பான காட்சிகள் அங்கிருந்த CCTV Footage-ல் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காவல் நிலைய அதிகாரி அனில் படேல் வழக்குப்பதிவு செய்து, டயர் வெடித்ததற்கான காரணம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

இதையும் படிங்க: அடப்பாவி... உன்னோட தப்புக்கு அந்த பொண்ணு என்ன பாவம் பண்ணுச்சு! புதுப்பெண்ணுக்கு நொடியில் நேர்ந்த கொடூரம்....! 10 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கொடுமை! நெஞ்சை நடுங்கவைக்கும் CCTV வீடியோ...!!!