அச்சச்சோ.. ஸ்மார்ட் வாழ்க்கையில் இப்படி ஒரு ஆபத்தா? கையில் இருந்துகொண்டே உடலை கெடுக்கும் சாதனங்கள்.!
அன்றாட தேவையில் ஒன்றாகிவிட்ட ஸ்மார்ட்போன் மனிதர்களின் உடல் அமைப்பை மாற்றுவதாக எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிர்ச்சி தகவல்:
How Smartphones Are Changing Your Body: இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட்போன், கணினிகள் முக்கிய தேவை ஆகிவிட்டது. டிஜிட்டல் சாதனங்கள் நமக்கு பொருளாதார ரீதியாக முன்னேறவும், புதிய விஷயங்களை அறிந்துகொள்ள உதவினாலும் நமது உடலில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: எப்போதும் பசித்துக்கொண்டே இருக்கிறதா.? உஷார்.. இந்த பிரச்சனையாக இருக்கலாம்.!
பாதிப்புகள் என்ன?
அதாவது, கைகளில் பலவீனம், மங்கலான பார்வை, தவறான உடல் தோரணை ஆகியவை கூறப்படுகிறது. இதனை Phone Body என்ற புதிய வகை பிரச்சனையாக ஆய்வாளர்கள் வகைப்படுத்துகின்றனர். ஸ்மார்ட்போன் திரைகளை நாம் அதிகநேரம் பார்ப்பதால் தசைகள், எலும்புகள், மூளையின் செயல்பாடுகள் மெல்லமெல்ல பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

நுரையீரல் சுவாசம் குறையும்:
மொபைலை நாம் பயன்படுத்தும்போது தலையை குனிந்து பார்ப்பதால், கழுத்துப்பகுதியில் அழுத்தம் எப்ராடுகிறது. இதனால் கழுத்து-முதுகுத்தண்டு பகுதியில் 27 கிலோ எடை அழுத்தம் ஏற்பட்டு முதுகுத்தண்டு சேதமாகிறது. தசைப்பிடிப்பு, மூட்டு தேய்மானத்துக்கும் வழிவகை செய்கிறது. நுரையீரல் சுவாசிக்கும் திறனையும் குறைகிறது.
பலவீனமாகும்.
மணிக்கணக்கில் கணினியில் அமர்ந்தபடி வேலை செய்வது, ஸ்மார்ட்போன் பார்ப்பது கைகளின் வலிமையை குறைக்கும். நுணுக்கமான தசைத்திறன்கள் காலப்போக்கில் குறையும். பேனா பிடித்து எழுதுவது, சில கருவிகளை கையாள்வதில் மூளை-நரம்பு மண்டலம் இடையேயான ஒருங்கிணைப்பு பலவீனமாகும். கண்களின் பார்வையை நேரடியாக பாதிக்காது என்றாலும், வீட்டிலேயே முடங்கி இருப்பதால் இயற்கை வெளிச்சம் கிடைக்காமல் கண் பார்வை மங்கத்தொடங்கும்.
இதையும் படிங்க: கழிவறைக்குள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் நபரா நீங்கள்? உங்களுக்குத்தான் முக்கிய எச்சரிக்கை.!