காதலி இல்லாமல் தனிமையில் வாடுகிறீர்களா? உங்களுக்காக FACEBOOK வெளியிடப்போகுது புதிய ஆப்!Facebook will launch dating app very soon

நாகரிக வளர்ச்சிக்கேற்ப மனிதனின் அன்றாட செயல்பாடுகள் மாறிக்கொண்டே வருகிறது. உதாரணத்திற்கு FACEBOOK உபயோகிக்காதவர்களை காண்பது மிகவும் அரிதாகிவிட்டது. இந்நிலையில் டேட்டிங் செய்பவர்களுக்காக புதிய டேட்டிங் ஆப்பை விரைவில் அறிமுகம் செய்ய போவதாக F8 மாநாட்டில் FACEBOOK நிறுவனம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் இந்த ஆப்பிற்கான உள்ளக பரிசோதனை தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது FACEBOOK நிறுவனத்தில் பணிபுரியும் பயனர்கள் இந்த ஆப்பை பரிசோதனை செய்யலாம்.

Facebook dating app

இந்த அப்பிளிக்கேஷனில் முக்கியமாக டேட்டிங்கில் ஈடுபடுபவர்கள் தொடர்பான தகவல்கள் நண்பர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரியாமல் பாதுகாக்கும் வசதி உள்ளடக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவல் டுவிட்டர் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இந்த வசதி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.