32 கி.மீ தூரத்திலிருந்த ரோபோ மூலம் இதய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர் சாதனை!

32 கி.மீ தூரத்திலிருந்த ரோபோ மூலம் இதய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர் சாதனை!


doctor-tejas-patel-made-surgery-far-from-32km

இதயத்தில் ரத்தக் குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு ரோபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 32 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவர் தேஜாஸ் படேல் சாதனை படடித்துள்ளார்.

குஜராத்தை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற இதயவியல் நிபுணர் மருத்துவர் தேஜாஸ் படேல். அகமதாபாத்திலுள்ள ஒரு மருத்துவமனையில் மூத்த மருத்துவராக பணியாற்றிவருகிறார் படேல். அவர், இதய அறுவைச் சிகிச்சைக்கு அதிகமாக ரோபோ தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர். இந்த முறை முழுவதுமாக ரோபா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 32 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து அறுவைச் சிகிச்சை செய்து, நேற்று மருத்துவ உலகில் மிகப் பெரும் சாதனையை படைத்துள்ளார். 

gujarat

குஜராத் மாநிலம் காந்திநகரிலுள்ள அக்ஷர்தம் கோயிலிலிருந்து, 32 கிலோ மீட்டர் தொலைவில் ரத்தக் குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்டிருந்த நடுத்தர வயதுள்ள பெண்ணுக்கு ரோபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்துமுடித்தார். அவர் கோவிலில் இருந்தபடியே கம்ப்யூட்டர் உதவியுடன் அபெக்ஸ் இதய சிகிச்சை மருத்துவமனையில் இருந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். அவர் இருக்கும் இடத்தில் இருந்துகொன்டே அறுவை சிகிச்சை அறையில் இருக்கும் உபகரணங்களை பயன்படுத்தி இந்த சாதனையை செய்துள்ளார். 

அவர் செய்த இந்த அறுவை சிகிச்சையானது கோவில் வளாகத்தில் பெரிய திரையில் அனைவரும் பார்க்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி அங்கு வருகைதந்து மருத்துவரின் சாதனையை நேரில் பார்த்தார்.

gujarat

இது டெலி ரோபோட்டிக் அறுவைச் சிகிச்சை(Tele-robotic surgery) என்று அழைக்கப்படுகிறது. இது குறித்து மருத்துவர் படேல் பேசுகையில், ‘100  எம்.பி.பி.எஸ் வேகம் கொண்ட இணையவசதியைப் பயன்படுத்தி தொடர்ந்து 15 நிமிடங்கள் இந்த அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இணையவசதியில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் அடுத்த 30 வினாடிகளில் மருத்துவமணையில் நேரடியாக இருக்கும் மருத்துவர்கள் சிகிச்சையை தொடர ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அவ்வாறு ஏதும் நிகழாமல் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவுபெற்றது. இதய அறுவைச் சிகிச்சைக்கு மட்டுமில்லாமல், தசை தொடர்பான பிரச்னைகளுக்கும் இந்த முறையில் அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

இந்த தொழில்நுட்பம் கிராமப் புறத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை மற்றும் வல்லமைக் கொண்டது’ என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி, ‘கிராமப் புறத்திலுள்ளவர்களுக்கு சிறப்பான மருத்துவம் வழங்குவதற்கு இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு ஆராய்ச்சி மேற்கொள்வோம்’ என்று கூறியுள்ளார்.