லைப் ஸ்டைல்

"மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும்" - கண்டிப்பாக படிக்க வேண்டிய மனதை உருக்கும் பதிவு!

Summary:

change should start from us

"மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள் நண்பர்களே" என்று தொடர்கிறது அந்த முகநூல் பதிவு. இன்றுவரை தமிழகத்தில் நடைபெற்ற அத்தனை நிகழ்வுகளும் நம் கண்முன்னே வருகிறது. அதில் கேட்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கேள்விகளும் நமக்கு நெத்தியடியாய் உள்ளது. நாம் நடத்தும் அத்தனை போராட்டங்கள் மற்றும் நம் அரசியல்வாதிகள் எப்படி அரசியல் நடத்துகிறார்கள் என்பதை பற்றி மிக ஆணித்தரமாக எடுத்துரைத்துள்ளார் அந்த நண்பர். 

இந்த பதிவினை படிக்கும் போது நாம் எதற்காக போராட்டங்கள் நடத்துகிறோம், நமக்கு அரசியல்வாதிகள் தேவை தானா என்ற கேள்விகள் எழுகின்றன; நிச்சயம் உங்களுக்கும் எழும். அந்த பதிவில் அப்படி என சொல்லியிருக்கிறார்கள் என்று பாப்போம்:

Related image

*மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள் நண்பர்களே:*

1.பிள்ளைகளை ஆங்கிலவழி கல்வியில் படிக்கவச்சுகிட்டு, தமிழுக்கு ஆதரவாக போராட வேண்டியது.

2. ஓவன்ல சமைத்து A/c அறையில உட்கார்ந்து சாப்பிட்டு, அணுமின்சாரத்திற்கு எதிராக போராட வேண்டியது.

3. கேஸ் அடுப்புல பால் காய்ச்சு குடித்துவிட்டு, மீத்தேனுக்கெதிரா போராட வேண்டியது.

4.பெட்ரோலில் வண்டிய ஓட்டிக்கொண்டு, ஹைட்ரோகார்பனுக்கெதிரா போராட வேண்டியது.

5. விவசாயமே செய்யாது, விவசாயத்திற்கு ஆதரவாக போராட்டம்.

6. மாடு வெட்டி திண்ணுட்டு, மாட்டுக்கு ஆதரவாக போராட்டம்.

7. சாதி சலுகைகளை அனுபவச்சிகிட்டு, சாதிக்கெதிரா போராட்டம்.

8. இந்துமதத்தை மட்டும் இழிவு படித்திகிட்டு, மதசார்பிண்மைக்கு ஆதரவாக போராட்டம்.

9. பணம் கொடுத்து,பணம் வாங்கி ஓட்டு போட்டு, ஊழலக்கு எதிராக போராட்டம்.

10.மதுவிற்கு எல்லாம் அடிமையாகிவிட்டு, மதுக்கெதிரா போராட்டம்.

11. நீர்நிலைகளை எல்லாம் மாசு உண்டாக்கி அழித்துவிட்டு, நீருக்காதவராக போராட்டம்.

12. அரசிற்கு வரியே கட்டாமல், வளர்ச்சி எங்கே என்று கேட்டு போராட்டம்.

13. தவறு செய்தவர்களை தண்டித்தால், அடக்குமுறை,சர்வாதிகாரம்னு சொல்லி போராட்டம்.

அனைத்தையும் மக்களே செய்துவிட்டு
இந்தியாவை சில ஆண்டுகள் ஆட்சி செய்பவர்கள் தான் எல்லாத்திற்கும் காரணம் என்று சொல்லும் பொழுதுதான் வேடிக்கையாக உள்ளது.

தனி மனதின் ஒவ்வொருவரும் மாறினால் மட்டுமே நிச்சயம் மாற்றம் பிறக்கும்.
😨😨😨😨😨😨😨😨😨😨😨😨😨😨😨😨😨

எங்கடா என் ஆறுகள் என்று கேட்டேன்....
எங்கடா என் காடுகள் என்று கேட்டேன்......
எங்கடா என் மரங்கள் என்று கேட்டேன்....
எங்கடா என் மலைகள் என்று கேட்டேன்....
எங்கடா என் மண்ணு என்று கேட்டேன்....
எங்கடா என் மொழி என்று கேட்டேன்..... கடைசியா பதிலைச்சொன்னான்.....இதையெல்லாம் வித்து தான்.....உங்களுக்கு அரிசி கொடுத்தோம்....மாவரைக்க கிரைண்டர் கொடுத்தோம்....மஞ்சள அரைக்க மிக்சி கொடுத்தோம்....மயிர்காயவைக்க ஃபேனும் கொடுத்தோம்....மானாட மயிலாட காண டிவியும் கொடுத்தோம்.....கேம் விளையாட லேப்டாப் கொடுத்தோம்....தாலிக்கு தங்கமும்....அதை அறுக்க டாஸ்மாக்கும் கொடுத்தோம் என்றார்கள்...அடுத்த தலைமுறைக்கு என்னடா வளமிருக்கும்...? என்றேன்....அப்படி ஒன்றை வரவே விடமாட்டோமே ...!! என்றார்கள்....யாரடா நீங்கள் ...? என்றேன்....

நாங்கள் தான் #அரசியல்வாதிகள்
என்றார்கள்.....!!

*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!!

இது எனக்கும் பொருந்தும்! " என்று பதிவிட்டுள்ளது.


Advertisement