அமெரிக்கா, ஆஸ்திரேலியா எடுத்த அதிரடி முடிவு! இக்கட்டான நிலையில் சீனா!

அமெரிக்கா, ஆஸ்திரேலியா எடுத்த அதிரடி முடிவு! இக்கட்டான நிலையில் சீனா!



Australia said no to china for 5g technology

இன்று உலக நாடுகள் அனைத்திலும் அணைத்து தரப்பட்ட மக்களாலும் தொலைத்தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அணைத்து நாடுகளிலும் 4G தொழிநுட்பம் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் 5G தொழிநுட்ப்பத்தை உருவாகும் முயற்சியில் அனைத்து நாடுகளும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

இவ்வாறான தொழிநுட்ப உருவாக்கத்தை தனது நாட்டு நிறுவனங்களை தவிர பிற நாட்டு நிறுவனங்களுக்கு தருவதில் அணைத்து நாடுகளும் கட்டுப்பாட்டுடன் உள்ளன. ஏனெனில் பிற நாடுகளுக்கு இதை தருவதன் மூலம் தனது நாட்டின் தகவல்கள் திருடப்பட்ட வாய்ப்புள்ளதாக அணைத்து நாடுகளும் கருதுகின்றன.

இதில் அமெரிக்க முன்னிலை வகிக்கிறது. தனது நாட்டின் தகவல் தொழிநுட்ப சேவைகளை சீனாவிடம் தரும்போது அது வழியாக தகவல்கள் திருடப்படலாம் என அமெரிக்கா நம்புகிறது.

America

அமெரிக்கா போன்றே ஆஸ்திரேலியாவும் தனது நாட்டின் 5G தொழிநுட்ப உருவாக்கத்தை சீனாவிடம் தருவதை தடை செய்துள்ளது.

இதனால் Huawei மற்றும் ZTE நிறுவனங்கள் மிகப்பெரிய பின்னடைவை அடைந்துள்ளன. மேலும் பிரபல நாடுகளின் இந்த முடிவினை மற்ற நாடுகளும் பின்பற்றலாம் என எதிர்பார்க்க படுகிறது.