ஹேக்கர்கள் கசியவிட்ட 53 கோடி பேஸ்புக் கணக்குகள்.! அதில் உங்களுடையதும் உள்ளதா.? கண்டுபிடிக்க எளிய வழி.!

ஹேக்கர்கள் கசியவிட்ட 53 கோடி பேஸ்புக் கணக்குகள்.! அதில் உங்களுடையதும் உள்ளதா.? கண்டுபிடிக்க எளிய வழி.!



53-crore-facebook-accounts-leaked-by-hackers

சமூகவலைதளம் என்பது இந்த காலக்கட்டத்தில் இல்லாவிட்டால் உலகமே இருண்டது போல் ஆகிவிடும் உலகம். அந்த அளவிற்கு மக்கள் சமூகவலைத்தளத்தை சார்ந்தே இருக்கின்றனர். அதிலும் முகநூல், வாட்ஸ் அப்பில் அதிகப்படியானோர் அக்கவுண்ட் வைத்துள்ளனர். இதற்காகவே பேஸ்புக், வாட்ஸ்அப் தளங்கள் பயனர்களின் தேவைகளை கண்டறிந்து பல்வேறு புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகின்றது.

இந்தநிலையில், உலகளவில் சுமார் 53 கோடி பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் இணையதளத்தில் கசிந்ததாக கூறப்பட்டு வருகிறது. பெரும்பாலும் பயனர்களின் செல்போன் எண்கள் கசிந்துள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், இதில் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களும் கசிந்துள்ளனவா என்பதை பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் தெரிந்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Facebook

அதாவது இணையத்தில் கசிந்த 53 கோடி பேஸ்புக் பயனர்களின் கணக்குகளில் உங்களுடையதும் ஒன்றா? என்பதை கண்டறிய “Have I been Pwned” என்ற இணையதளத்தில், பேஸ்புக் பயனர்கள் தங்கள் மெயில் ஐடி அல்லது மொபைல் எண்ணை கொடுத்து, தங்களது தகவல் கசிந்துள்ளதா என்பதை அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.