சிறுமியிடம் சின்னஞ்சிறு கவிதை பேசி அத்துமீறல்‌.. காதலிப்பதாக நடித்து நயவஞ்சகனின் பதைபதைப்பு செயல்..!

சிறுமியிடம் சின்னஞ்சிறு கவிதை பேசி அத்துமீறல்‌.. காதலிப்பதாக நடித்து நயவஞ்சகனின் பதைபதைப்பு செயல்..!


youth-boy-arrested-for-girl-rape-case

சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த காமுகன் கைது செய்யப்பட்டுள்ளான்.

தஞ்சாவூர் அடுத்த ரெட்டிப்பாளையம் பகுதியில் 17 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், சிறுமியிடம் மானோஜிப்பட்டி பகுதியைச் சேர்ந்த அறிவழகன் என்பவர் ஆசைவார்த்தை கூறி நெருக்கமாக பழகி வந்துள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

இதனால் சிறுமி கர்ப்பமடைந்த நிலையில், பெற்றோருக்கு இதுகுறித்து தெரிய வர சிறுமியை தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின் சிறுமியின் நிலை குறித்து சைல்ட் லைன் அமைப்பிற்கு புகார் அளிக்கப்பட்டதையடுத்து, வல்லம் அனைத்து மகளிர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

thanjavur

இந்த தகவலின் பெயரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், அறிவழகன் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி, ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அறிவழகன் மீது வல்லம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.