அரசியல் தமிழகம்

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வில் களமிறங்கிய படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள்!

Summary:

youngsters ready to election in ADMK


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்தநிலையில் அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி அமைப்புக்கான பொறுப்புகளுக்கு போட்டியிட விரும்பும் நிர்வாகிகள், தொண்டர்கள் நவம்பர் 15-ஆம் தேதி மற்றும் 16-ஆம் தேதிகளில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அ.தி.மு.க. அலுவலகங்களில் அதற்கான கட்டண தொகையை செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

அங்கு நகராட்சி தலைவர் பதவிக்கு ரூ.10 ஆயிரம், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.2,500, பேரூராட்சி தலைவர் பதவிக்கு ரூ.5 ஆயிரம், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1,500, ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.3 ஆயிரம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.5 ஆயிரம் கட்டணமாக பெறப்பட்டது. 

இந்தநிலையில் அதிமுகவில் போட்டியிடுபவர்கள் பெயர், விலாசம் உள்ளிட்ட சுயவிவரங்களை  பூர்த்தி செய்து விருப்ப மனுக்களை அ.தி.மு.க. நிர்வாகிகள் கொடுத்தனர். மேலும் விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு அதற்குரிய ரசீது வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி அமைப்புக்கான பொறுப்புகளுக்கு போட்டியிட படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் அதிகப்படியானோர் விருப்பமனுக்களை கொடுத்தனர்.
 


Advertisement