அந்தரத்தில் தொங்கி கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரைவிடவிருந்த 80 பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஒற்றை இளைஞன்!. குவியும் பாராட்டு!.

அந்தரத்தில் தொங்கி கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரைவிடவிருந்த 80 பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஒற்றை இளைஞன்!. குவியும் பாராட்டு!.



youngster saved 80 peoples


தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற அரசு பேருந்து ஒன்று விபத்தில் சிக்கி பள்ளத்தில் கவிழ்ந்த நிலையில் ஜெஸிபி ஓட்டுனர் ஒருவரால் அதில் இருந்த 80 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற அரசு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. அதில் சுமார் 80 பயணிகளுடன் வந்த அந்த பேருந்து, சாலை ஓரத்தில் உள்ள ஒரு பெரும் பள்ளத்தில் கவிழும் நிலையில் நின்றது.

சினிமாவில் போல் முன்பக்க சக்கரம் அந்தரத்தில் தொங்கியபடி பேருந்து எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்ற நிலையில் தத்தளித்து கொண்டிருந்த நிலையில் பயணிகள் கடும் அலறல் சத்தம் போட்டுகொண்டிருந்தனர்.


அப்போது அந்த பகுதியில் பொக்லைன் வண்டியின் மூலம் மண் அள்ளும் வேலையில் ஈடுபட்டிருந்தார் கபில் என்ற இளைஞர். பேருந்து விபத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர் அவர் இயக்கி கொண்டிருந்த பொக்லைன் வண்டியை அந்த பேருந்து இருக்கும் பகுதிக்கு கொண்டு சென்று மீட்புப்பணியை தொடங்கியுள்ளார்.

நூலிழையைல் தத்தளித்து கொண்டிருந்த அந்த பேருந்தை எச்சரிக்கையுடன்  துணிச்சலாகி அவரின் பொக்லைன் இயந்திரம் மூலம் தடுத்து நிறுத்தியுள்ளார். பின்னர் பேருந்துக்குள்ளிருந்து உயிர் பயத்தில் தத்தளித்த பயணிகளை  ஒவ்வொருவராக இறங்க சைகை காட்டியுள்ளார்.                                                                                                                                     
பேருந்தில் இருந்து இறங்கிய பயணிகள் அனைவரும் கண்ணீருடன் இளைஞர் கபிலுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். அப்பொழுது அந்த இளைஞர் கூறுகையில் தமது பொக்லைன் வண்டி அந்த பகுதியில் இல்லை என்றால், பயங்கர உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும் என கூறினார்.