தனக்குதானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் போட்டுவிட்டு, இளைஞர் செய்த காரியம்! பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!youngman-commits-suicidein-alangudi

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பாத்திமா நகரில் வசித்து வந்தவர் சதீஷ்குமார். 19 வயது நிறைந்த அவர் தனியார் கல்லூரி ஒன்றில் ஐடிஐ 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் சதீஸ்குமாரால் சமீபத்தில் இவரது வீட்டில் பெரும் பிரச்சனை வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அவரது அப்பா மற்றும் அண்ணன் இருவரும் சதீஷ்குமாரை மோசமாக  திட்டி அடித்துள்ளனர்.

இந்நிலையில் மனமுடைந்த சதீஷ்குமார், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். பின்னர் தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை செல்போனிலேயே டிசைன் செய்து அதனை தன்னுடைய நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே இதுகுறித்து சதீஷ்குமாரின் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளனர்.

suicide

அதனைத் தொடர்ந்து சதீஷ்குமாரின் குடும்பத்தார்கள் அவரை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் மறுநாள் மழவராயன்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதனைக்கண்ட சதீஷ்குமாரின் குடும்பத்தார்கள் கதறி துடித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சதீஷ்குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சதீஷ்குமாரின் தற்கொலைக்கு காரணமான அப்பா, அண்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.