"செல்போன் பாக்காதனு சொன்னது ஒரு குத்தமா.." இளம் பெண் எடுத்த விபரீத முடிவு.!! காவல் துறை விசாரணை.!!



young-woman-commits-suicide-after-mother-scolding-her-f

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் தற்கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது.

செல்போனுக்கு அடிமையான இளம் பெண்

கோயமுத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரது மகள் தன்யாஸ்ரீ வயது 19. கல்லூரியில் படித்து வந்த இவர் அதிகமாக செல்போன் பார்க்கும் பழக்கத்தை கொண்டிருந்திருக்கிறார். இதன் காரணமாக தாய் மற்றும் மகளிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

tamilnadu

கண்டித்த தாய்

சம்பவம் நடந்த தினத்தன்றும் வழக்கம் போல் வீட்டு வேலைகளை கவனிக்காமல் செல்போனே கதியென இருந்திருக்கிறார் தன்யாஸ்ரீ. இதன் காரணமாக தாய் மற்றும் மகளிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது விஜயலட்சுமி தனது மகளை கடுமையாக கண்டித்திருக்கிறார். இதனால் விரக்தியடைந்த நிலையில் காணப்பட்டிருக்கிறார் தன்யாஸ்ரீ.

இதையும் படிங்க: "என் ஆள லவ் பண்ணுவியா.." முக்கோண காதலில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு.!! ரவுடி கைது.!!

தூக்கு போட்டு தற்கொலை

இந்நிலையில் வீட்டில் ஆளில்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து இருக்கிறார் தன்யாஸ்ரீ. இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இறந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில் தாய் செல்போன் பார்ப்பதை கண்டித்ததால் தற்கொலை செய்தது தெரிய வந்திருக்கிறது.

இதையும் படிங்க: அட பாவமே... பீடி துண்டால் பறி போன உயிர்.!! முதியவருக்கு நேர்ந்த சோக முடிவு.!!