"என் ஆள லவ் பண்ணுவியா.." முக்கோண காதலில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு.!! ரவுடி கைது.!!
சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் இளைஞர் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் ஸ்ரீவில்லிபுதூர் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளைஞருக்கு அரிவாள் வெட்டு
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். சென்னையில் பணியாற்றி வரும் இவர் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் செல்வராஜை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக செல்வராஜ் ஹைகிரவுண்ட் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.
குற்றவாளி கைது
ரயில் நிலையத்தில் வைத்து இளைஞர் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சங்கரன் கோவில் போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இந்நிலையில் செல்வராஜை வெட்டியது தொடர்பாக சூரிய கண்ணன் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் தெரிய வந்திருக்கிறது.
இதையும் படிங்க: அட பாவமே... பீடி துண்டால் பறி போன உயிர்.!! முதியவருக்கு நேர்ந்த சோக முடிவு.!!
ஒரே பெண்ணை காதலித்ததால் கொலை வெறி தாக்குதல்
சூரிய கண்ணனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்திருக்கிறது. மேலும் செல்வராஜ் வெட்டப்பட்டது தொடர்பாக வாக்குமூலமளித்த சூரிய கண்ணன், தான் காதலித்த பெண்ணையே செல்வராஜூம் காதலித்ததால் அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சூரிய கண்ணனை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: "1/2 பவுன் தங்கத்துக்கு உயிர் போச்சே.." குழந்தை பிறந்த ஒன்றரை மாதத்தில் தாய் படுகொலை.!! இளைஞர் கைது.!!