தமிழகம்

அடச்சீ.. கருமம்.. ஓடும் ரயிலில் இளம்பெண் கண் முன்பே சுய இன்பம் செய்த இளைஞர்... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்.!

Summary:

அடச்சீ.. கருமம்.. ஓடும் ரயிலில் இளம்பெண் கண் முன்பே சுய இன்பம் செய்த இளைஞர்... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்.!

சென்னை, ரயிலில் பயணம் செய்த இளம்பெண்ணின் கண் முன்பே சுய இன்பம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தனியார் ஊடாக ஒன்றில் வேலை பார்த்து வரும் ரேணுகா என்ற இளம்பெண் இரவில் பணி முடித்து விட்டு சென்னையிலிருந்து தாம்பரம் நோக்கி செல்லும் ரயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி பயணம் செய்துள்ளார். 

அப்போது ரயில் கிண்டி ஸ்டேஷனை வந்ததும் அங்கு இளைஞர் ஒருவர் பெண்கள் பயணிக்கும் பெட்டியில் ஏறியுள்ளார். இதனை கண்டு கொள்ளாமல் ரேணுகாவும் இருந்துள்ளார். அதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட அந்த இளைஞர் ஆபாசமான செயலில் ஈடுப்பட்டுள்ளார்.

முதலில் ரயிலில் உட்கார்ந்து கொண்டு சுய இன்பம் செய்துள்ளார்‌. பின்பு எழுந்து நின்று ரேணுகாவின் கண் முன்பே சுய இன்பம் செய்துள்ளார். இந்நிகழ்வுகள் அனைத்தையும் ரேணுகா வீடியோவாக எடுத்ததை பார்த்து அந்த இளைஞர் பதறியடித்து ஓட்டம் பிடித்துள்ளார்.

அதனையடுத்து அந்த வீடியோவை ரேணுகா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து தாம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில் ரேணுகா வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் குற்ற செயலில் ஈடுபட்ட மீனம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Advertisement