திருமணத்திற்கு முன் கர்ப்பமான காதலி! காட்டுக்கு அழைத்துச்சென்று காதலன் செய்த கொடூரம்!
திருமணத்திற்கு முன் கர்ப்பமான காதலி! காட்டுக்கு அழைத்துச்சென்று காதலன் செய்த கொடூரம்!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அப்பாதுரை என்பவர் தனது சகோதரி லட்சுமியை காணவில்லை என கவல்த்துறையில் புகார் அளித்திருந்தார். இந்தநிலையில் காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட ஒரு சடலத்தை அப்பாதுரையிடம் காட்டியபோது, அது அவரது சகோதரி லட்சுமியின் சடலம் என்பது உறுதி ஆனது.
தந்தை இறந்ததால் குடும்ப கஷ்டத்தை போக்க பாத்திர கடையில் லட்சுமி வேலை பார்த்து வந்துள்ளார். அவர் வேலைபார்த்த கடையில் விசாரித்தபோது கடந்த 30 ஆம் தேதி லட்சுமியை வேன் டிரைவர் அருண்குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றது தெரியவந்தது.
செல்போன் மூலம் அருண்குமாரை கண்டுபிடித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அருண்குமார் மீது சந்தேகம் வந்து அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
லட்சுமியும், அருண் குமாரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், லட்சுமிக்கு திருமண ஆசை காட்டி அவரிடம் மிகவும் நெருங்கி தனிமையில் இருந்துள்ளார். இதனையடுத்து இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
ஆனால், திருமணம் செய்துகொள்வதை அருண்குமார் தள்ளிப்போட்டுள்ளார். இதற்கிடையில் லட்சுமி கர்ப்பமாகியுள்ளார். இந்தநிலையில் லட்சுமியிடம் தனியாக பேசவேண்டும் என கூறி, அருகில் உள்ள காட்டிற்கு அழைத்து சென்று, கருக்கலைப்பு செய்துவிடு என அருண்குமார் கூறியுள்ளார்.
ஆனால் லட்சுமி மறுப்பு தெரிவித்துள்ளார் இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் உருட்டுகட்டையால் லட்சுமியை அடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனைத்தொடர்ந்து தனது தனது நண்பனை வரவழைத்து லட்சுயின் உடலை முந்திரி தோப்பில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அருண்குமார் மற்றும் அவரது நன்பரையும் போலீசார் கைது செய்தனர்.