தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
அட பாவி மனுஷா.. நல்லதுக்கு தானே சொன்னான்.. ஒரே ஒரு அட்வைஸால் தலையில் பூந்தொட்டியை போட்டு கொலை செய்த நண்பன்.!
சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் எட்வின். இவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், தனது உறவினரான மணிகண்டன் என்பவரின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில், கடந்த 18-ஆம் தேதி எட்வின் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு எட்வின் அவரது வீட்டில் நண்பர்களுடன் மது அருந்தியுளார். அப்போது அவரது நண்பர் அஜித்குமார், இனிமேல் எந்த குற்றங்களும் செய்யாமல் திருந்தி வாழ வேண்டும் என்று எட்வினுக்கு அறிவுரை கூறியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், எட்வின் வீட்டில் மது அருந்திய அவரது நண்பர்களான ரவி, தினேஷ் ஆகிய இருவரும் வீட்டுக்கு சென்று விட்டனர். அஜித்குமார் மட்டும் எட்வின் வீட்டிலேயே தங்கியுள்ளார். அப்போது தனக்கு அட்வைஸ் செய்த நண்பன் அஜித்குமார் தூங்கி கொண்டிருக்கும்பொழு து அவரது தலையில், பூந்தொட்டியை போட்டு கொலை செய்துள்ளார் எட்வின். இந்தநிலையில் நேற்று காலை ரவி வீட்டுக்கு சென்ற எட்வின், அஜித்குமாரை கொலை செய்து விட்டதாக கூறிவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அஜித்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், திருந்தி வாழும்படி அறிவுரை கூறிய நண்பன் அஜித்குமாரின் தலையில் பூந்தொட்டியை போட்டு கொலை செய்து விட்டு எட்வின் தப்பியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய எட்வினை தேடி வருகின்றனர்.