‘செல்பி’ மோகத்தால் கூவம் ஆற்றில் தவறி விழுந்த இளைஞர்.! உயிருக்கு போராடிய நிலையில் நேர்ந்த ஆச்சர்யம்.!

‘செல்பி’ மோகத்தால் கூவம் ஆற்றில் தவறி விழுந்த இளைஞர்.! உயிருக்கு போராடிய நிலையில் நேர்ந்த ஆச்சர்யம்.!



young-man-fell-into-the-river

தற்போதைய வாழ்க்கைமுறையில், இளசுகள் முதல் பெரியவர்கள் வரை பாகுபாடின்றி பலரும் செல்பி புகைப்பட மோகத்தில் இருந்து வருகின்றனர். பலரும் வித்தியாசமாக செல்பி எடுத்து நண்பர்களிடையே பாராட்டு பெறவேண்டும் என்று மலை உச்சியில் தலைகீழாய் தொங்குவது, உயரமான நீர்வீழ்ச்சியின் மேலே ஒற்றைக்காலில் நிற்பது, ஓடுகிற மோட்டார் சைக்கிள் நின்று கொண்டு சவாரி செய்து போஸ் கொடுப்பது, மிக உயரமான கட்டிடங்களின் விளிம்பில் அமர்ந்து போட்டோ எடுப்பது என்று ஆபத்தை உணராமல் விபரீத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதனால் பல்வேறு உயிர் இழப்புகளும், விபத்துகளும் நிகழ்ந்த போதும் இம்மாதிரி செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்தநிலையில், சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த மூர்த்தி என்ற நபர் நேற்று அதிகாலை நேப்பியர் பாலம் அருகே நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் தன்னை செல்பி எடுக்க முயன்றுள்ளார்.

selfy

அப்போது எதிர்பாராதவிதமாக மூர்த்தி கால் தவறி நேப்பியர் பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் கிழே விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் கூவம் ஆற்றில் உயிருக்கு போராடிய நிலையில் அலறல் சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அங்கு நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தண்ணீரில் தத்தளித்த மூர்த்தியை மீட்பு கருவிகள் உதவியுடன் மீட்டனர். இதையடுத்து அந்த இளைஞரை எச்சரித்து காவல்துறையினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.