தமிழகம்

10ம் வகுப்பு மாணவியை 1வருடமாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன்! போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது.!

Summary:

young man arrested for abuse young girl

தமிழகத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் கொரோனா சமயத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தநிலையில், ராமநாதபுரத்தில் இளைஞன் ஒருவன் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை, அதே பகுதியை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பவன் கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இந்தநிலையில் அந்த மாணவி 9 மாதம் கர்பம் அடைந்த நிலையில் ஸ்டீபன் ராஜ் மீது காவல் நிலையத்தில் மாணவியின் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, ஸ்டீபன்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.


Advertisement