சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
வீட்டிற்கு தெரியாமல் காதலியை ரூமில் தங்கவைத்த இளைஞன்!. பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்!
கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் மஞ்சுளா என்ற இளம்பெண், பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். திருப்பூரை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் மஞ்சுளா பணிபுரியும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
மஞ்சுளாவிற்கும் கார்த்திக்கும் பழக்கம் ஏற்படு இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி கார்த்திக் வீட்டிற்கு சென்றிருந்த மஞ்சுளா, அவரது ரூமில் தங்கியுள்ளார். ஆனால் இந்த விஷயம் கார்த்திக்கின் வீட்டாருக்கே தெரியாது என கூறப்படுகிறது.
இந்தநிலையில், நேற்று மஞ்சுளா கார்த்திக்கின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை கொண்டுள்ளார்.
தகவலறிந்து வந்த போலீஸார் மஞ்சுளாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மஞ்சுளாவின் உடலைப் பார்த்து அழுத அவரது தாய், தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக போலீசாரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் கார்த்திக் மீது வழக்குப்பதிவு செய்து மஞ்சுளாவின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.