13 வயது அதிகமான நபரை திருமணம் கொண்ட இளம்பெண்! திருமணமான 2 மாதத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

13 வயது அதிகமான நபரை திருமணம் கொண்ட இளம்பெண்! திருமணமான 2 மாதத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!


young girl suicide after marriage

ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ். மங்கலம் அருகே உள்ள வாகவயல் கிராமத்தைச் சோ்ந்த ரத்தினம் என்பவரின் மகன் பாக்கியராஜ் என்பவருக்கும், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே நன்னியாவூரைச் சோ்ந்த முருகேசன் என்பவரின் மகள் கௌசல்யா என்பவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பாக்யராஜைவிட 13 வயது கெளசல்யாவிற்கு குறைவு என கூறப்படுகிறது.

திருமணமானபிறகு புதுமணத்தம்பதி இருவரும் ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ்.மங்கலம் அரசாவூரணி பெருமாள் கோயில் தெருவில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கௌசல்யா இரண்டு தினங்களுக்கு முன்பு அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

suicide

போலீசார் அங்கு சென்று பார்த்தபோது கௌசல்யா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த நிலையில் அவரது உடலில் காயங்கள் இருந்துள்ளன. இதனையடுத்து சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதனையடுத்து, தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கௌசல்யாவின் தந்தை, முருகேசன் புகார் அளித்துள்ளார்.

இந்தநிலையில் ராமநாதபுரம் காவல்துறையினர் கௌசல்யாவின் மரணம் குறித்து கௌசல்யாவின் கணவன் பாக்கியராஜ், மாமனார் ரத்தினம், பாக்கியராஜின் அண்ணன் மனைவி ஜோதி ஆகிய 3 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 2 மாதங்களில் இளம்பெண் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.