BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
மீனவரை கடலுக்குள் இழுத்துச் சென்ற 100 கிலோ மீன்! வலையில் சிக்கிய பிறகு ஆவேசத்துடன் மீன் செய்த அதிர்ச்சி சம்பவம்!
ஆந்திர மாநிலம் அச்சுதபுரம் அருகே உள்ள புடி மடகா என்ற மீனவர் கிராமத்தில் யர்ரையா (26) என்பவர் வசித்து வந்துள்ளார். அவருடைய சகோதரர் கோர்லையா மற்றும் நண்பர்கள் யெல்லாஜி, அப்பலராஜு ஆகியோரை உடன்கொண்டு நேற்று மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
கடலில் சிக்கிய பிரம்மாண்ட மீன்
கடற்கரையிலிருந்து 30 கிலோமீட்டர் தூரம் சென்றுவிட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென வலையில் ஒரு மிகப்பெரிய கொம்முக்கோணம் மீன் சிக்கியது. இதன் எடை சுமார் 100 கிலோ ஆக இருந்தது. அந்த மீனை படகிற்குள் இழுக்க முயன்றபோது, வலையில் சிக்கியதால் அதிக கோபமடைந்த மீன் யர்ரையாவை கடலுக்குள் இழுத்துச் சென்றது.
இந்த சம்பவத்தை பார்த்த மற்ற நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். யர்ரையாவின் சகோதரர் கொர்லையா, உடனடியாக கிராமத்திற்கு தகவல் தெரிவித்தார். கிராம மக்கள் பல படகுகளில் கடலுக்குள் சென்று உடலை தேட முயன்றும் அவர்களால் கண்டுபிடிக்க முடியாததால் அவர்கள் கிராமத்திற்கு திரும்பினர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திடீரென கடைக்குள் நுழைந்து துப்பாக்கியை காட்டிய மர்மநபர்! அடுத்தடுத்து 5 பேர்! பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! வைரலாகும் வீடியோ...
மீனவர் கிராமத்தில் நிலவும் ஆழ்ந்த சோகம்
யர்ரையாவின் மரணம், புடி மடகா கிராமத்தில் பெரும் மன உலைச்சளையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். மீனவர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: கப்பலிலிருந்து கடலுக்குள் குதித்த 5 வயது சிறுமி! அடுத்த நொடியே ஹீரோவாகிய தந்தை செய்த நெகிழ்ச்சி செயல்! வைரலாகும் வீடியோ..