அதிகாலையில் கோவில் வாசலில் கிடந்த இளைஞரின் தலை..! தஞ்சாவூரில் நடந்த பகீர் சம்பவம்..!

அதிகாலையில் கோவில் வாசலில் கிடந்த இளைஞரின் தலை..! தஞ்சாவூரில் நடந்த பகீர் சம்பவம்..!


young-boy-murdered-in-thanjavur

தஞ்சாவூர் மாவட்டம், ரெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் மணிகண்டன்(வயது 21)  நேற்று முன்தினம் இரவு தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அவரது நண்பர் ஒருவருடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ரெட்டிப்பாளையம் சாலையில் சென்றபோது திடீரென 5 பேர் கொண்ட கும்பல் மணிகண்டனை தூக்கிச்சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டனின் நண்பர் தஞ்சை மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்திற்கு தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்தபோது, ரெட்டிப்பாளையம் சாலை புதுஆற்றுப்பாலம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் மணிகண்டன் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அங்கு அவரது உடல் மட்டும் கிடந்துள்ளது. தலையை தேடி பார்த்தபோது அதே பகுதியில் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சப்த கன்னியம்மன் கோவில் முன்புறம் கிடந்தது.

Murderஇதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட மணிகண்டனுக்கு ஏற்கனவே அந்த பகுதியில் முத்துராமன் என்பவருடன் விரோதம் இருந்து வந்துள்ளது. முத்துராமனுக்கு நெருங்கியவரை மணிகண்டன் கொலை செய்ததாக ஏற்கனவே மணிகண்டன் சிறை சென்று வந்துள்ளார். இதனால் மணிகண்டன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.