தமிழகம்

காதலியின் மானத்தை காப்பாற்ற உயிரை விட்ட காதலன்! பதறவைத்த அதிர்ச்சி சம்பவம்!

Summary:

young boy died for save young girl

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஜீவித்குமார் என்ற இளைஞர் திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஜீவித்துக்கும் அவரது உறவுக்கார பெண் ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் இவர்கள் இருவரும் கடந்த 30ஆம் தேதியன்று கொள்ளிடம் ஆற்றின் அருகே பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, தனிமையில் இருந்த ஜீவித்குமார் மற்றும் அந்த இளம்பெண்ணை அப்பகுதியை சேர்ந்த  கோகுல், கலையரசன் ஆகியோர் போதையில் இருந்தநிலையில் அவர்களிடம் தரக்குறைவாக பேசி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தனது காதலியிடம் அவர்கள் அத்துமீறுவதை பார்த்து ஆத்திரமடைந்த ஜீவித்குமார் முதலில் அவர்களிடம் கெஞ்சி உள்ளார். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து சில்மி‌ஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஜீவித்குமார் 2 பேரையும் தடுத்து போராடிய நிலையில் தன காதலியை அங்கிருந்து ஓடிவிடு என கூறி அவர்களிடம் போராடியுள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்து தப்பித்து கரைக்கு வந்த இளம்பெண், அங்கிருந்தவர்களிடம் நிலைமையை  கூறி காதலன்னை மீட்க வந்துள்ளார். ஆனால் ஜீவித்குமார் அங்கு இல்லை. இதனையடுத்து மூன்று நாட்களுக்கு பின்னர் ஜீவித்குமாரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுல், கலையரசன் ஆகியோரை கைது செய்தனர்.


 


Advertisement