தமிழகம்

3 வயது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினர்! மாஞ்சா நூல் குழந்தையின் கழுத்தை அறுத்து சிறுவன் பலி!

Summary:

young boy died by Kite String Manja

சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த கோபால் குமார் ஷெராப் என்பவர் அவரது மனைவி சுமித்ரா, 3 வயது குழந்தை அபினேஷ் ஆகியோருடன் நேற்று காலை அண்ணாநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் மேம்பாலத்தின் மீது நேற்று மாலை சென்று கொண்டிருந்தார்.

அவரது மனைவி சுமித்ரா இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருக்க, அவரது மகன் அபினேஷ் நடுவில் அமர்ந்திருந்தார். அப்போது எங்கிருந்தோ வந்த காற்றாடி மாஞ்சா நூல் குழந்தை அபினேஷ்வரின் கழுத்தை அறுத்துள்ளது.

சென்னையில் மாஞ்சா நூல் காற்றாடி விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டும் இது தொடர்பாக பலமுறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை போலீசாரும் காற்றாடி விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல முறை எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னையில் நேற்று மாலை மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, காசிமேடு, தண்டையார்பேட்டை போன்ற பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது காசிமேடு ஏ.ஜே. காலனியில் மளிகை கடையில் காற்றாடிகளை விற்பனை செய்த சார்லஸ் என்ற வியாபாரியும் கைது செய்யப்பட்டார்.


Advertisement