தமிழகம்

11 வயது சிறுமி பாலியல் வழக்கில் தேடப்பட்ட தொழிலாளி.! போலீசாருக்கு பயந்து எடுத்த முடிவு.!

Summary:

சிறுமி பாலியல் வழக்கில் தேடப்பட்ட தொழிலாளி போலீஸ் விசாரணைக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம், போசம்பட்டி பகுதியை சேர்ந்தவர்  போசன். 47 வயது நிரம்பிய இவர் விவசாய கூலிதொழில் செய்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து குழந்தைகள் னால அமைப்பு மூலம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து போசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். தன்னை போலீசார் தேடுவதை அறிந்த போசன், விசாரணைக்கு பயந்து நேற்று காலை அவரது சொந்த ஊரான கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே ஒரு பூந்தோட்ட பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், போசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட போசனுக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement