அதிர்ச்சி.! சென்னையில் அம்மா உணவகத்தில் வேலை பார்த்த பெண் பணியாளருக்கு கொரோனா உறுதி.! மூடப்பட்ட உணவகம்.!
உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்திலும் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தற்போதைய நிலவரப்படி தமிழாக்கத்தில் இதுவரை 3023 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 30 பேர் பலியாகி உள்ளனர்.
தமிழகத்தில் சென்னையில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நேற்றுமட்டும் 203 பேர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து சென்னையில் அதிக அளவு பாதிப்பு உள்ளதால் உணவு விடுதிகள், ஓட்டல்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில், அம்மா உணவகத்தில் பலர் சாப்பிட்டு வந்தனர்.
இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் கஜபதி தெருவில் அமைந்துள்ள அம்மா உணவகம் ஒன்றில் வேலைபார்த்துவந்த பெண் ஒருவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனே அந்த பெண் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதனை தொடர்ந்து அந்த பெண் வேலைபார்த்த அம்மா உணவகம் மூடப்பட்டுள்ளது, மேலும் அந்த பெண்ணுடன் தொடர்புடைய பலரையும் தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.