தமிழகம் இந்தியா

இந்த பெண்ணுக்கு அபிராமி பரவாயில்லை போல!. உல்லாசமாக இருப்பதற்கு குழந்தையை இப்படியா செய்வது!.

Summary:

women tortured her baby for her illegal affairs


திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் திருமணத்திற்கு பிறகு தனது கணவர் செல்வனுடன் பெங்களூருவில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் ஊர் திருவிழாவுக்காக சொந்த ஊருக்கு வந்த மகாலட்சுமி, தனது குழந்தையுடன் திருமணத்திற்கு முன்பு காதலித்த கதிரவன் என்பவருடன் தலைமறைவாகியுள்ளார்.

இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் சில நாட்களுக்கு பின் ஊருக்கு திரும்பி வந்த மகாலட்சுமியிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்  கதிரவனுடன் பல்வேறு இடங்களில் அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்தது தெரியவந்தது.

இவர்கள்  உல்லாசமாக இருப்பதற்கு இடையூறாக இருந்த தனது இரண்டரை வயது பெண் குழந்தைக்கு சூடு வைத்து கொடுமை படுத்தி இருந்ததும் தெரிய வந்தது. மகாலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


Advertisement