இப்படி ஒரு திட்டமா..? ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? முதல்வர் விஜய்யின் போடும் மாஸ்டர் பிளான்..!!!



women-entitlement-scheme-2500-rupees-2028

தமிழ்நாட்டில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகையை ரூ.1,000-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தும் திட்டம் தொடர்பான தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளன. 2028-ஆம் ஆண்டில் இந்தத் தொகை உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது. 2029 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, இந்தத் திட்டத்தை அரசியல் ரீதியாக முக்கிய வியூகமாக பயன்படுத்த முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2028-ல் ரூ.2,500 ஆக உயர்த்த திட்டமா?

தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், தற்போது பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையை 2028-ஆம் ஆண்டில் ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்து திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தொகை உயர்வு தொடர்பாக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இதையும் படிங்க: தீபாவளிக்கு முன் மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000..? திட்டவட்டமாக தமிழக அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

புதிய பயனாளிகள் சேர்க்கப்பட வாய்ப்பு

தொகை உயர்வுடன், திட்டத்தில் கூடுதல் பெண்களை பயனாளிகளாக சேர்ப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படலாம் என கூறப்படுகிறது. 2028-ஆம் ஆண்டின் இறுதிக்குள் புதிய பயனாளிகளை சேர்க்கும் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், தற்போதைய பயனாளிகள் மட்டுமின்றி, திட்டத்தில் சேர தகுதி உள்ள பெண்களிடையேயும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

2029 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் வியூகம்?

2029 மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தொகை உயர்வு மற்றும் பயனாளிகள் விரிவாக்கம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த தகவல்கள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திட்டத்தின் தொகை உயர்வு மற்றும் புதிய பயனாளிகள் சேர்க்கை குறித்து அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பே இறுதி முடிவை உறுதிப்படுத்தும்.

 

இதையும் படிங்க: ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை...! CM விஜய் எடுத்த அதிரடி முடிவு..! இல்லத்தரசிகளுக்கு வெளியான ஹாப்பி நியூஷ்..!!!