விஜய் - திரிஷா சர்ச்சை.. அந்த காரை இப்போ யாரு வச்சிருக்கா? - விமலின் நக்கல் பதில்.!
Watch: நாய்க்குட்டிகளை துடிக்க துடிக்க சுவற்றில் அடித்து கொன்ற பெண்.. அதிர்ச்சி வீடியோ.!
திருச்சியில் அண்டை வீட்டு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் நாய்குட்டிகளை சுவற்றில் அடித்துக்கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோ கட்சிகளும் வெளியாகியுள்ளன.
திருச்சி மாவட்டத்தில் உள்ள கம்பரசம்பேட்டை வெள்ளாளந்தெருவில் வசித்து வருபவர் ஜெய்கணேஷ். இவர் பாய்லர் ஆலையில் பணிபுரிந்து வருகிறார். ஜெய்கணேஷின் மனைவி மீனாட்சி மிஸ்ரா (வயது 28). இவரது எதிர் வீட்டில் வசித்து வருபவர் கணேஷ் பிரபு. இவரின் மனைவி புவனேஸ்வரி (வயது 30). புவனேஸ்வரிக்கும், மீனாட்சிக்கும் இடையே கடந்த ஓராண்டாக வீட்டு வாசலில் இருசக்கர வாகனம் நிறுத்துவது தொடர்பாகவும், வீட்டு வாசலை கூட்டி சுத்தம் செய்வது, தண்ணீர் தெளிப்பது போன்ற விஷயத்தில் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.
கோபத்தில் நடந்த கொடூர செயல்:
முதலில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பின் கைகலப்பாக மாறியுள்ளது. இந்த நிலையில் புவனேஸ்வரி மீனாட்சியின் 3 வயது மகனை கல்லால் தாக்கியிருக்கிறார். படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் வீட்டுக்கு வந்த மீனாட்சி கோபத்தில் புவனேஸ்வரி பராமரித்து வந்த வளர்ப்பு நாயின் பிறந்து சில நாட்களேயான இரண்டு நாய்க்குட்டிகளை சுவரில் தூக்கி அடித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: "சரக்கடிக்க காசு குடுயா..." போதையில் எகிறிய மகன்.!! கல்லைப் போட்டு கதையை முடித்த தந்தை.!!
வீடியோ வைரல்:
இதில் நாய்க்குட்டிகள் கத்தியபடி பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி கண்டனத்தை குவித்து வருகின்றன. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மீனாட்சியை நேற்று கைது செய்தனர். மேலும் மகனை தாக்கியது தொடர்பாக கணேஷ்பாபு அளித்த புகாரின் பேரில் புவனேஸ்வரியும் கைது செய்யப்பட்டார்.
குறிப்பு: இந்த வீடியோவில் சிலருக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பார்வையாளர்கள் கவனத்துடன் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கொடூரச் செயலில் ஈடுபட்ட பெண்
— Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் (@Autokabeer) March 7, 2026
திருச்சி: கம்பரசம் பேட்டை அருகே நாய்க் குட்டிகளை சுவற்றில் வீசி எறிந்து கொடூரமாகக் கொலை செய்த மீனாட்சி மிஸ்ரா என்ற பெண்
வீட்டின் அருகே சுற்றிய பசு மாடு மீதும் கம்பால் தாக்கியுள்ளார்; சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை pic.twitter.com/7KsPRnU9AD
இதையும் படிங்க: பிரிந்து சென்ற மனைவி மகிழ்ச்சியாக இருந்ததால் கொடூர கொலை.. சைக்கோ கணவன் வெறிச்செயல்..!