தமிழகம்

நள்ளிரவில் வீட்டிற்கு வந்த கணவன்.! கட்டிலுக்குள் அடியில் கள்ளக்காதலன்.! அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

கள்ளக்காதலை கணவன் கண்டுபிடித்துவிட்டதால், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த உள்ளியக்கோட்டையை சேர்ந்தவர் வேல்முருகன். வேல்முருகனுக்கு நாகலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். வேல்முருகன் கரூர் மாவட்டத்தில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், வேல்முருகனின் மனைவிக்கும், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்தநிலையில் கடந்த செவ்வாய்கிழமை வேல்முருகன் அவரது வீட்டிற்கு நள்ளிரவில் வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்த வேல்முருகன் கதவை நீண்ட நேரம் தட்டியும் மனைவி நாகலட்சுமி கதவை திறக்காமல் இருந்துள்ளார். நீண்ட நேரத்திற்கு பிறகு அவரது மனைவி கதவை திறந்துள்ளார். இதனையடுத்து வேல்முருகன் அவரது பெட்ரூமுக்கு சென்று தனது ஆடைகளை மாற்றும் போது, கட்டிலுக்கு அடியில் ரமேஷ் ஒளிந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

உச்சக்கட்ட ஆத்திரமடைந்த வேலுமுருகன் கோவத்தில் ரமேஷ் மற்றும் நாகலட்சுமியை தாக்கியுள்ளார். மேலும் நள்ளிரவில் காவல்நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றதாகவும், காலை வந்து புகார் அளிக்குமாறு வேல்முருகனை போலீசார் திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், தனது கணவருக்கு உண்மை தெரிந்துவிட்டதால், குற்ற உணர்ச்சியில் நாகலட்சுமி வீட்டிற்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement