ரூ.9 கோடி இழப்பீடு வேண்டும்.. நடிகர் ரவி மோகன் தொடர்ந்த வழக்கு.! ஏன்? என்ன நடந்தது?
கணவனை தாயுடன் சேர்ந்து பிளான் போட்டு தீர்த்து கட்டிய மனைவி! அதிர்ச்சி பின்னணி!

திருப்பத்தூர் மாவட்டம் ஆலாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்பாபு. இவர், மாதனூர் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட பிரதிநிதியாக இருந்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மனைவி ஜெயந்தி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 27-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ரமேஷ் பாபு பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் ரமேஷ் பாபுவின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால் அவரைப்பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் கடந்த 28-ஆம் தேதி மலையில் சடலம் ஒன்று ஏரி கால்வாய் பகுதியில் உள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், ரமேஷ் பாபுவின் மாமியார் சரசா மற்றும் மனைவி ஜெயந்தி ஆகியோர் கூலிப்படையினரை வைத்து ரமேஷ் பாபுவை கொலை செய்தது தெரியவந்தது. ரமேஷ் பாபு தினந்தோறும் குடித்துவிட்டு வந்து ஜெயந்தியை தாக்கியதால்,ஜெயந்தி மற்றும் சரசா இருவரும் இணைந்து தங்களது உறவினர்கள் மற்றும் கூலிப்படையினர் என 4 பேரின் உதவியோடு ரமேஷ் பாபுவை கொலை செய்ய முடிவு செய்தனர்.
இந்தநிலையில் கடந்த 27-ஆம் தேதி ரமேஷ்பாபுவை பின்தொடர்ந்து சென்ற நான்கு நபர்கள் இரும்பு கம்பியால் தலையில் தாக்கி அடித்து கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து மனைவி ஜெயந்தி மற்றும் மாமியார் சரசா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த இராமன், கௌதமன், விக்கி, தனுஷ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.