தமிழகம்

கணவரின் நிர்வாண சடலத்துடன் 2 நாட்கள் வாழ்ந்த மனைவி... மகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..! திடுக்கிடும் உண்மைகள்..! 

Summary:

கணவரின் நிர்வாண சடலத்துடன் 2 நாட்கள் வாழ்ந்த மனைவி... மகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..! திடுக்கிடும் உண்மைகள்..! 

பூட்டிய வீட்டுக்குள் நிர்வாணமாக இறந்து கிடந்த கணவரின் சடலத்துடன், மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி 2 நாட்கள் வாழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புரசைவாக்கம் பகுதியில் வைக்கோல் தெருவில் வசித்து வருபவர் அசோக் பாபு (வயது 53). இவருக்கு திருமணமாகி ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். 

மகன் வெளியூரில் வேலை பார்த்து வரும் நிலையில், திருமணமான இவரது மகள் தனது குடும்பத்தாரோடு பெங்களூரில் வசித்து வருகின்றார்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக மகள் ஆர்த்தி தனது அப்பாவுக்கு போன் செய்தபோது, அவர் போனை எடுக்காததால் இன்று வேப்பூர் போலீசாருடன் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். 

வீடு உள்பக்கமாக தாழிட்ட நிலையில் அசோக் பாபு நிர்வாணமாக இறந்து கிடந்ததை தொடர்ந்து, அருகில் மனநலம் பாதிக்கப்பட்ட அவரது மனைவி பத்மினி அசோக் பாபுவை பார்த்தபடி இருந்துள்ளார்.தொடர்ந்து கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு யாரையும் கதவை திறக்க விடாமல் பத்மினி தடுத்ததால், வேப்பேரி காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். 

அங்கு இறந்துகிடந்த அசோக் பாபாவின் உடலை மீட்ட காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் அவரது மனைவியான பத்மினியையும் அரசு மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.பின் இது குறித்து விசாரணை நடத்திய நிலையில், அசோக் பாபுவின் முகம் அழுகியும், உடல் உப்பியும் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர் எவ்வாறு இறந்தார்? என தெரியவரும் என்று கூறிய காவல்துறையினர், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 174-ன் படி இயற்கைக்கு மாறான மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Advertisement