சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
திருமணமான 20 நாட்களில் வேலை முடிந்து வீட்டுக்குள் நுழைந்த கணவன்! அவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு 23 வயது நிரம்பிய இளம் பெண்ணுடன் 20 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வேல்முருகன் வேலைக்கு சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பியுள்ளார்.
அப்போது அவரது மனைவி வீட்டில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து தேட ஆரம்பித்துள்ளார். அந்த சமயம் அவரது செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு வாய்ஸ் மெசேஜ் வந்துள்ளது. அதில் அவரது மனைவி, உன்னை எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு விரும்பிய வாழ்வை நான் தேடி போகிறேன். என்னை யாரும் தேட வேண்டாம் என பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வேல்முருகன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளம்பெண் வீட்டின் அருகில் உள்ள சந்தோஷ் என்பவருடன் சென்றிருப்பது தெரியவந்தது. இந்நிலையில் தனது ஒரே மகன் இவாறு செய்துவிட்டானே என்ற விரக்தியில் சந்தோஷின் தந்தை விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார். இந்தநிலையில் சந்தோஷ் மற்றும் அந்த இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.