தமிழகம்

கணவன் உயிரை விட கள்ளக்காதலனுடன் உல்லாசம் தான் முக்கியம்.! நள்ளிரவில் மனைவி செய்த கொடூரச்செயல்.!

Summary:

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள கோட்டூர் அரசமரத்தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன். இவர் உ

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள கோட்டூர் அரசமரத்தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன். இவர் உசிலம்பட்டி அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வந்தார். இவருக்கு மணிமேகலை என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர்.

மணிமேகலைக்கும், அதே பகுதியை சேர்ந்த மலைச்சாமி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராஜேஷ்கண்ணனுக்கு தெரியவந்ததால் மலைச்சாமியையும், மனைவியையும் கண்டித்துள்ளார். இதனால் மணிமேகலை மற்றும் ராஜேஷ் கண்ணன் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மணிமேகலை, காதலன் மலைச்சாமியுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு ராஜேஷ்கண்ணன் தனது வீட்டின் அருகில் உள்ள மாட்டு கொட்டகையில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது மணிமேகலை கொடுத்த தகவலையடுத்து அங்கு வந்த மலைச்சாமி, அம்மிக்கல்லை தூக்கி ராஜேஷ் கண்ணன் தலையில் போட்டுள்ளார். வலியில் ராஜேஷ்கண்ணன் போட்ட அலறல் சத்தம் கேட்டு அவரது தம்பி கதிரவன் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அங்கு இரத்த வெள்ளத்தில் ராஜேஷ்கண்ணன் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, கதிரவன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மலைச்சாமி தான் இந்த கொலையை செய்தது உறுதியானதால், அவரை கைது செய்ததுடன், இதற்கு உடந்தையாக இருந்த மணிமேகலையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement