காமவெறியின் கோரத்தாண்டவம்.! கள்ளக்காதலனுடன் உல்லாசம், இடையூறாய் வந்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்.!
காமவெறியின் கோரத்தாண்டவம்.! கள்ளக்காதலனுடன் உல்லாசம், இடையூறாய் வந்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்.!

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க இடையூறாக இருந்த கணவனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் கமுதிக்கு அருகேயுள்ள ராமாசாமிபட்டியில் வசித்து வருபவர் ஜெயராஜ். இவரது மனைவி பொன்மணி.பொன்மணிக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக அதேபகுதியை சேர்ந்த அசோக் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
மேலும் ஜெயராஜ் வியாபாரம் தொடர்பாக வெளியூர் செல்லும் நேரத்தில் பொன்மணி அசோக்குடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் உயிரோடு இருந்தால் தனது கள்ளக்காதலை தொடரமுடியாது என எண்ணிய பொன்மணி தனது கணவனை கொல்ல திட்டம் போட்டுள்ளனர்.
இந்நிலையில் வியாபாரம் தொடர்பாக வெளியூர் சென்று வீடு திரும்பிய ஜெயராஜை பொன்மணி தனது கள்ளக்காதலனோடு சேர்ந்து வெட்டி கொலை செய்து தூக்கி வீசியுள்ளனர்.
பின்னர் வெட்டப்பட்ட தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பொன்மணி கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.