தமிழகம்

உனக்காக தான் செல்லம் உன் கணவனை கொலை செய்தேன்.! கொலைவழக்கில் வெளியான அதிர்ச்சி ஆடியோ.!

Summary:

வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி உள்பட ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த முருகன் என்பவர் லோகேசினி என்பவரை திருமணம் செய்து கொண்டு சென்னை கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வந்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு மர்ம நபர்கள் திடீரென முருகனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். 

இதுகுறித்து கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முருகனின் மனைவியே தனது திருமணம் மீறிய உறவுக்கு கணவன் இடையூறாக இருப்பதாகக் கூறி, காதலன் சண்முகநாதன் என்பவரின் உதவியுடன் கூலிப்படைகளை ஏவி கொலை செய்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. 

லோகேசினி அவரது காதலன் சண்முகநாதன் ஆகியோர் பேசிய ஆடியோ கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் கள்ளகாதலுக்காகவே முருகனை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து முருகனின் மனைவி லோகேசினி அவரது காதலன் சண்முகநாதன், கூலிப்படையினர் என ஆறு பேருக்கும் ஆயுள் தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 


Advertisement