குடும்ப கஷ்டத்திற்காக அயல்நாட்டிற்கு சென்ற கணவன்!. மனைவி உள்ளூரில் கள்ளக்காதலனுடன் செய்த செயல்!. இறுதியில் நேர்ந்த சோகம்!.

குடும்ப கஷ்டத்திற்காக அயல்நாட்டிற்கு சென்ற கணவன்!. மனைவி உள்ளூரில் கள்ளக்காதலனுடன் செய்த செயல்!. இறுதியில் நேர்ந்த சோகம்!.


wife died for his illegal affairs

கோத்தகிரியை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார். கணவர் வெளிநாட்டில் வசித்து வந்ததால், இவருடைய மனைவி லோகேஸ்வரி  மற்றும் இவர்களுது மகன் கார்த்திகேயனுடன் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் லோகேஸ்வரியின் அம்மா தனியாக இருக்கும் மகளின்  வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது முன்பக்க கதவு பூட்டி இருந்தது. நீண்ட நேரம் கத்தி கூப்பாடு போட்டும் கதவை திறக்காததால், சந்தேகம் அடைந்த லோகேஸ்வரியின் அம்மா காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். 

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு லோகேஸ்வரி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார்.
மேலும் அவரது 4 வயது மகன் கார்த்திகேயனின் கழுத்தும் அறுக்கப்பட்டு உயிருக்கு போராடியபடி கிடந்துள்ளான்.

illegal affairs

காவல்துறையினர் சிறுவனை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கொலைக்கான காரணம் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

கவுரி சங்கர் என்பவர் ஈரோட்டில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். அந்த கம்பெனியில் தயாரிக்கப்படும், மூலிகை பொருட்களை லோகேஸ்வரி வாங்கி விற்பனை செய்துள்ளார்.

இதனால், இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது, அவர் அடிக்கடி லோகேஸ்வரி வீட்டில் வந்து, தங்கி சென்றார். வேறு நபருடன் லோகேஸ்வரிக்கு தொடர்பு இருப்பதாக கூறி, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கவுரிசங்கர், லோகேஸ்வரி மற்றும் அவரது மகன் கழுத்தை அறுத்துவிட்டு தப்பித்து சென்றுள்ளார்.

அப்பகுதியில் உள்ள, சிசிடிவி கமெராவில் கவுரிசங்கர் வந்தது பதிவாகி உள்ளது. இதனையடுத்து சம்பவம் நடந்த 24 மணிநேரத்தில் கவுரிசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.