சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
எனக்கு கம்பெனி கொடுத்தே ஆகணும்.. டார்ச்சர் செய்த கணவர்! தாங்க முடியாம மனைவி எடுத்த அதிரடி முடிவு!!
புதுச்சேரி, பெரிய காலாப்பட்டு என்ற பகுதியை சேர்ந்தவர் ரேவதி. 28 வயது நிறைந்த இவருக்கு கடந்த 2019ம் ஆண்டு சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரான வெங்கடேஷ் பாபு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது ரேவதிக்கு வரதட்சணையாக 100 பவுன் நகை மற்றும் சீர்வரிசை கொடுத்துள்ளனர்.
வெங்கடேஷ் பாபுவுக்கு மது பழக்கம் இருந்துள்ளது. அதுமட்டுமின்றி அவர் தனது மனைவியையும் குடிக்க சொல்லி டார்ச்சர் செய்து வந்துள்ளார். இதற்கு ரேவதி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. அதுமட்டுமன்றி வெங்கட் பாபு ரேவதியின் தந்தை பெயரில் உள்ள வீட்டையும் எழுதி கொடுக்குமாறு கொலைமிரட்டல் விடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவரது கொடுமைகளை தாங்கி கொள்ள முடியாமல் ரேவதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தனது கணவர் தன்னை துன்புறுத்தியதை குறிப்பிட்டிருந்த ரேவதி அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.. அந்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.