காவாலா பாட்டு எல்லாம் ஓரம் போ!! வந்துட்டா மோனிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் பாடல்.
தற்கொலை செய்வதற்கு முன் மனைவி அனுப்பிய வீடியோ! வெளியான அதிர்ச்சி பின்னணி!

விருத்தாசலம் அருகே உள்ள எருமனூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கு ஷாபனா என்ற பெண்ணுடன் 2 வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் ஷாபனாவிடம் அவரது மாமியார் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
விஜயகுமாரின் திருமணத்தின் போது, 50 சவரன் நகைகளும், ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள இரு சக்கர வாகனமும், வீட்டுக்கு தேவையான அனைத்துத் பொருட்களும், வரதட்சணையாக பெண் வீட்டார் கொடுத்துள்ளனர். ஆனாலும் மாமியார், ஷோபனாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக கூறப்படுகின்றது.
இதனால் ஷோபனா கடும் வேதனையடைந்துள்ளார். இதனையடுத்து ஷோபனா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து அவரது செல்போனில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், அம்மா என்னிடம் வரதட்சணை கேட்டு மாமனார்-மாமியார் துன்புறுத்துவதாகவும், அதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தான் இறந்த பிறகு தனது மகனுக்கே அனைத்து சொத்தும் சேர வேண்டும், நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன். என்னை வளர்த்து ஆளாக்கியது போல் எனது மகனையும் வளர்த்து ஆளாக்குங்கள் அம்மா, என உருக்கமாக பேசி, அந்த வீடியோவை பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி வைத்து விட்டு நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.