BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
"கன்னத்தில் அறைந்ததால் ஆத்திரம்..." கணவனுடன் சேர்ந்து காதலனை தீர்த்து கட்டிய மனைவி.!!
திருச்சி திருவெறும்பூர், அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (50). இவர் ரேஷன் கடையில் பணியாளராக இருந்து வருகிறார். இவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். மனைவி மகேஸ்வரியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தம்பதி இருவரும் 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வீரமுத்து (52) என்பவரின் மனைவி லட்சுமியுடன் ரமேஷ் குமாருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இருவரும் அடிக்கடி தனிமையில் பேசி வருவது, உல்லாசமாக இருப்பது என சுற்றி திரிந்தனர். இந்நிலையில் நேற்றிரவு அந்தப் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ரமேஷ் குமார், லட்சுமியை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் கோபமடைந்த லட்சுமி தன் கணவரிடம் இதை பற்றி கூறியிருக்கிறார்.

இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அப்பகுதி மக்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பின்னர் வீட்டுக்கு வந்த ரமேஷ் குமார் தனது உறவுக்காரரான ரோகித் சர்மாவிடம் செல்போனை வாங்கிக்கொண்டு ரயில்வே தண்டவாளம் வழியாக சென்றுள்ளார். இந்நிலையில் தனது செல்போனை வாங்குவதற்காக ரமேஷ் குமார் இருக்கும் இடத்திற்கு ரோகித் சர்மா சென்ற போது தண்டவாளம் அருகே ரமேஷ் குமார் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ந்து போனார்.
இதையும் படிங்க: அதிக போதை கேட்டு அடம் பிடித்த காதலி... அரிவாளால் வெட்டி சாய்த்த கள்ளக்காதலன்.!!
இதுகுறித்து ரோகித் சர்மா போலீசில் புகாரளித்தார். அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் வீரமுத்து வீட்டிற்கு விசாரிக்க சென்றபோது அங்கே வீர முத்து தலை உள்ளிட்ட 3 இடங்களில் லேசான கத்திக்குத்து காயங்களுடன் இருந்தார். பின்னர் இது குறித்து போலீசார் அவர்களிடம் விசாரிக்கையில் கடும் கோபத்தில் இருந்த ரமேஷ் குமார், வீர முத்து வீட்டிற்கு சென்று வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் இருவருக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறி மாறி கத்தியால் சராமாரியாக வெட்டிக் கொண்டனர். அவர்களுடன் லட்சுமியும் சேர்ந்து கள்ளக்காதலனை தாக்கியுள்ளார்.
இதனால் ரமேஷ் குமார் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ந்த தம்பதியினர் உடலை யாருக்கும் தெரியாமல் தண்டவாளத்தில் போட்டுள்ளனர். தம்பதி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா.? என்ற கோணத்திலும் விசாரிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அதிக போதை கேட்டு அடம் பிடித்த காதலி... அரிவாளால் வெட்டி சாய்த்த கள்ளக்காதலன்.!!