2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? அமைச்சர்கள் கூறிய தகவல்!

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? அமைச்சர்கள் கூறிய தகவல்!



who is ADMK CM Candidate

2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு குறைவான காலமே உள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டன. திமுகவில் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் என்பது வெட்ட வெளிச்சமான நிலையில், எதிர்ப்புறம் உள்ள அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? அல்லது வேறு ஒருவர் அறிவிக்கப்படுவாரா? என்ற கேள்வியும் எழுந்துவருகிறது.

இந்தநிலையில், நேற்று மதுரை பரவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில், அதிமுகவை இரு தலைவர்கள் வழிநடத்துகிறார்கள். அதிமுக எப்போதும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தான் நடைபெறும். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி யாரை தலைவராக தேர்ந்தெடுக்கிறார்களோ, அவரே அடுத்த முதல்வர் என்று பதிலளித்தார்.

இந்த நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவரது ட்விட்டர் பக்கத்தில், "இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தை சந்திப்போம்! எடப்பாடியாரை முன்னிருத்தி தளம் அமைப்போம்! களம் கான்போம்! வெற்றி கொள்வோம்! 2021-ம் நமதே!என்றும் எடப்பாடி பழனிசாமியே முதல்வர்" என்று கருத்து தெரிவித்துள்ளார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த அமைச்சர்களின் மாறுபட்ட கருத்துகளால் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.