அரசியல் தமிழகம்

கேப்டன் விஜயகாந்திற்கு என்னதான் ஆச்சு? ஏன் இந்த அமெரிக்கா பயணம்?

Summary:

What happened to vijayakanth

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப்பெரிய இடத்தை பிடித்தவர் நடிகர் விஜயகாந்த். அனல் தெறிக்கும் வசனங்கள், அதிரடி சண்டை காட்சிகள் என படம் முழுவதும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதில் விஜயகாந்திற்கு நிகர் அவர் மட்டுமே.

சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்த விஜகாந்த்திற்கு ஆரம்பல காலத்தில் அமோக வரவேற்பு இருந்தது. ஆனால் அவரை பற்றி சமூக வலைத்தளங்களில் வந்த கேலி, கிண்டல்களால் அவரது அரசியல் வாழ்க்கை சற்று சறுக்கலை சந்தித்தது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணி மூலம் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் போட்டியிட்டார், ஆனால் மக்கள் நல கூட்டணி மாபெரும் தோல்வியடைந்தது. அதனை தொடர்ந்து அரசியலில் விஜகாந்த்தின் ஈடுபட்டு சற்று குறைவாகவே காணப்பட்டது.

மேலும் உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்த கேப்டன் விஜயகாநத் ஒருமுறை அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார்.

அதற்கு பிறகு அவர் சென்னை திரும்பினார். தற்போது அவர் மீண்டும் இரண்டாவது முறையாக சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இன்று இரவு தான் அவர் சென்னையில் இருந்து மனைவி மற்றும் மகனுடன் கிளம்பி சென்றுள்ளார்.

அது பற்றி கட்சி சார்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.


Advertisement