மக்களே உஷார்!. வானிலை ஆய்வு மையம் அறிவித்த புயல் எச்சரிக்கை!. கொட்டி தீர்க்கவிருக்கும் கனமழை!.

மக்களே உஷார்!. வானிலை ஆய்வு மையம் அறிவித்த புயல் எச்சரிக்கை!. கொட்டி தீர்க்கவிருக்கும் கனமழை!.


weather-report-announced-about-rain


அரபிக்கடலில் புயல் உருவாக உள்ளதால் மீனவர்கள் வரும் 12ம்  தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் இறுதியில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. 

தென்மேற்கு பருவ மழையால் தமிழகத்தின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தேனி, திண்டுக்கல், கோவை, புதுக்கோட்டை, நீலகிரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைவதால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததால், தமிழகத்தின் பல மாவட்டங்களில்  மழை சேதத்தை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் வரலாறு காணாத அளவு கனமழை பெய்தது. அங்கு பெரும் உயிர்சேதங்களும் ஏற்பட்டது. இதே போல் கர்நாடகாவில் பெய்த கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி தமிழகத்தின் ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது.

இந்நிலையில் தென்  மேற்கு பருவமழை நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இதையடுத்து இன்று முதல் வட கிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம்  அதிரடியாக அறிவித்துள்ளது.


இதனால் புயல் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் ஆந்திராவின் வடக்கு கடலோர பகுதிகள் மற்றும் ஒடிசாவுக்கு தான் கன மழையை கொடுக்கும் என கூறப்படுகிறது.