திமுக துணை பொதுசெயலாளராக பதவி வகித்த வி.பி துரைசாமி இன்று பாஜகவில் இணைகிறார்!

திமுக துணை பொதுசெயலாளராக பதவி வகித்த வி.பி துரைசாமி இன்று பாஜகவில் இணைகிறார்!


Vp duraisami joins in bjp

பாஜகவில் இன்று இணைய இருப்பதாக விபி துரைசாமி தெரிவித்திருந்தார். மேலும், திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தன்னை நீக்குமாறு கடிதம் எழுதியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

திமுக துணை பொதுசெயலாளர் வி.பி துரைசாமி சமீபத்தில் பாஜக மாநில தலைவர் எல்.முருகனை பாஜக அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான ஒன்று என வி.பி. துரைசாமி தரப்பில் கூறப்பட்டாலும், திமுகவினரிடையே இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

vp duraisami

இப்படிப்பட்ட சூழ்நிலையில் , துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து வி.பி. துரைசாமி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக துணைப்பொது செயலாளர் பதவியில் அந்தியூர் செல்வராஜ் எம்.பியை நியமித்தது திமுக .இதுகுறித்து வி.பி. துரைசாமி கூறுகையில், பதவி பறிப்பு ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்று தான். என் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும்.  இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.  எனக்கு எதிராக சிலர் சதி செய்துள்ளனர் என தெரிவித்தார்.

இதனையடுத்து தான் பாஜகவில் இன்று இணைய இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும், திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தன்னை நீக்குமாறு கடிதம் எழுதியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். வி.பி.துரைசாமி திமுகவில் 1989-91 வரையும், 2006-11 வரையும் துணை சபாநாயகராகப் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.