பட்டாசு ஆலை விபத்தில் இளைஞர் பலி.. உரிமையாளர் கைது.. விருதுநகரில் சோகம்.!

பட்டாசு ஆலை விபத்தில் இளைஞர் பலி.. உரிமையாளர் கைது.. விருதுநகரில் சோகம்.!


virudhunar-men-dead-issue

பட்டாசு ஆலை வெடி விபத்தில், இளைஞர் ஒருவர் சிக்கி உயிரிழந்ததில், ஆலை உரிமையாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் அருகாமையில் கத்தாளம்பட்டி பகுதியில் சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலையில் வெடி மருந்து தயாரிக்கப்பட்ட நிலையில், வெடிமருந்து உராய்வு காரணமாக நேற்று பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

Virudhunagar

இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய விக்னேஷ் என்ற இளைஞர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டபோது, ஆலை உரிமையாளர் தலைமறைவானது தெரியவந்துள்ளது.

பின் தலைமறைவாக இருந்த ஆலை உரிமையாளரை காவல்துறையினர் தேடி கண்டுபிடித்து கைது செய்த நிலையில், மற்ற மூவரையும் தேடி வருகின்றனர்.