மனவளர்ச்சி குன்றிய சிறுமி பலாத்காரம்.. விருதுநகரில் அதிர்ச்சி சம்பவம்.!Virudhunagar Mentally Affected Minor Girl Sexual Abused Police Arrest Culprit Under Pocso

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவிருந்தாள்பட்டி கிராமத்தில் மனவளர்ச்சி குன்றிய சிறுமி வசித்து வருகிறார். இவரின் பெற்றோர்கள் வேலைக்கு சென்றுவிட்டால், சிறுமி வீட்டிலேயே தனியாக வீட்டில் இருப்பது வழக்கம். 

இந்த தருணத்தை உபயோகம் செய்துகொண்ட தொழிலாளி கருப்பசாமி என்ற மனோஜ் (வயது 48), சிறுமியிடம் பேச்சுக்கொடுத்து தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

viruthunagar

இந்நிலையில், கடந்த சில வாரமாக சிறுமி உடல்நலக்குறைவால் அவதிப்படவே, பெற்றோர் சிறுமியிடம் விசாரணை செய்தபோது உண்மை தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அப்பைநாயக்கன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் கருப்பசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.