விநாயகர் சதுர்த்திக்கு கடும் கட்டுப்பாடுகள்! சிலை கரைப்புக்கும் புதிய விதிமுறைகள்!



Vinayagar chathurthi rules and regulations

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சிலைகளை தயாரிப்பது மற்றும் கரைப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் வகையில் பொதுமக்கள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் போன்ற பொருட்களால் சிலைகள் தயாரிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலைகளுக்கு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சிலைகளின் அலங்காரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும். உலர்ந்த மலர்கள், வைக்கோல் உள்ளிட்ட இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம் என்றும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொதுமக்களுக்கு குட் நியூஸ்… இன்று முதல் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை!

vinayakar sathurthi

விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும். கடல், ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை மாசுபடுத்தாத வகையில், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி சிலை கரைப்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து, அரசு வெளியிட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் பொதுமக்கள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் இன்று வெளுக்கப்போகும் மழை.. 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!