ஐயோ... கொடுமையே! பெத்த மனசெல்லாம் எப்படி துடிக்கும்... சரக்கு லாரி மீது மோதி சுக்குநூறாக நொறுங்கிய கார்! சம்பவ இடத்திலேயே பலியான 8 கல்லூரி மாணவர்கள்.... பெரும் சோகம்!!!



kerala-thrissur-car-lorry-accident

கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டம் கப்மங்கலம் அருகே நள்ளிரவில் பயங்கர சாலை விபத்து நடந்துள்ளது. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்பகுதியில் தமிழ்நாடு பதிவு எண் கொண்ட கார் வேகமாக வந்து மோதியது. காரில் இருந்த 8 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் என தெரியவந்துள்ளது.

லாரியின் பின்பகுதியில் வேகமாக மோதிய கார்

நள்ளிரவு நேரத்தில் கார் கப்மங்கலம் பகுதி வழியாக சென்றுகொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீதியின் ஓரத்தில் சரக்கு லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. எதிர்பாராத விதமாக லாரியின் பின்பகுதியில் கார் வேகமாக மோதியது. மோதலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் காரில் இருந்தவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: கலிகாலம்.... 2 குழந்தைகளின் தாயும் 18 வயது இளம்பெண்ணும் செய்த காதல் திருமணம்! வைரலாகும் ஷாக்கிங் வீடியோ...!!!

உயிரிழந்த 8 பேரும் கல்லூரி மாணவர்கள்

விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், காரில் பயணம் செய்தவர்கள் அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் திண்டுக்கல்லில் உள்ள பி.எஸ்.என்ஏ பொறியியல் கல்லூரியில் படித்து வந்த மாணவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிவேகம் காரணமா? போலீசார் விசாரணை

முதற்கட்ட விசாரணையில் கார் அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், விபத்துக்கான முழுமையான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்து நடந்த விதம், காரின் வேகம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரே நேரத்தில் 8 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த தகவல் அவர்களது குடும்பத்தினர் மற்றும் கல்லூரி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: இந்தியாவை மோசமாக சித்தரிக்கும் AI வீடியோக்கள்! அதற்கு அமெரிக்க பெண் கொடுத்த தரமான பதிலடி....!!!